பிசாசு 2-வில் நெற்றிக்கண் பட வில்லன் நடிகர் - மிரட்டலான வேடமாம்!...
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் மிஷ்கின். அதன்பின் அஞ்சாதே, யுத்தம் செய், முகமுடி, துப்பறிவாளன், சைக்கோ உட்பட சில திரைப்படங்களை இயக்கினார். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யாரை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் துவங்கினார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா, நடிகை பூர்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. குளியல் தொட்டியில் ஒரு பெண் கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக படுத்திருக்கும் அந்த போஸ்டர் கவனம் ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய அதேநேரம் மிரட்டலான வேடத்தில் நெற்றிக்கண் பட வில்லன் அஜ்மல் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.