மீண்டும் நயன்தாராவுடன் இணையும் நெற்றிக்கண் வில்லன்! அதுவும் இந்தப் படத்திலா..!!

மிஷ்கின் இயக்கத்தில் நரேன், விஜயலட்சுமி நடிப்பில் கடந்த 2008ல் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் வில்லன் ரோலில் அறிமுகமாகி மிரட்டியிருப்பர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் மளமளவென குவிந்தது.

இதைத்த்தொடர்ந்து திரு திரு துரு துரு, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள், சித்திரம் பேசுதடி-2 என பல படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் அறிமுகமாகும் முன்பே மலையாளத்தில் பிரணயக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார். 

Nayanthara

மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்த அவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்து அசத்தியிருந்த ‘நெற்றிக்கண்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது இவர் மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தமுறை தமிழில் இல்லையாம், மலையாளப் படத்திலாம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 2013ல் தமிழ், மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் நேரம்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2015ல் நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவியை வைத்து பிரேமம் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சென்னையில் மட்டும் 350 நாட்களுக்கும் மேல் ஓடியது. 

actor ajmal

தற்போது அல்போன்ஸ் புத்திரன் நயன்தாரா, பிரித்வி ராஜை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் அஜ்மல் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜ்மல் அமீர் தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

Published by
adminram