More

பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் அமீர்கான். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அமீர்கான். தற்போது  1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Forrest Gump படக்கதையை ஹிந்தியில் ரீமேக் செய்து தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில்தான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. ஆனால், கால்ஷீர் பிரச்சனை காரணமாக அவர் நடிக்கவில்லை. அந்த வேடத்தில் நடிகை சமந்தாவின் கணவர் நாக சைத்தன்யா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் நடித்து  வந்த நடிகர் அமீர்கானுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Published by
adminram

Recent Posts