தமிழ் சினிமா உலகில் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. 80களில் பல திரைப்படங்களிலும் நடித்தவர். தனியாகவும் சரி, செந்திலோடு இணைந்தும் சரி கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. 80களில் வெளியான பல படங்களில் கவுண்டமணி இருப்பார்.
ஏனெனில், இளையராஜாவை போல படத்தின் வெற்றிக்கே கவுண்டமணி தேவைப்பட்டார். கவுண்டமணியும், செந்திலும் இணைந்து நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்கள். ஒருகட்டத்தில் சத்தியராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் ஆகியோருடன் இணைந்து இரண்டாவது ஹீரோ போல வலம் வந்தார் கவுண்டமணி.
Also Read
ஹீரோவை போல தனக்கும் ஒரு ஜோடி, பாடல், சண்டை காட்சி என எல்லாம் கேட்டார் கவுண்டமணி. படத்தின் வெற்றிக்கு அவர் தேவை என்பதால் இயக்குனர்களும், தயாரிப்பாளரும் அதை ஏற்றுகொண்டார்கள். அப்படி பல படங்களில் சத்தியராஜுடன் இணைந்து கவுண்டமணி அடித்த லூட்டியை ரசிகர்களால் மறக்கவே முடியாது.
ஒருநாளைக்கு 10 லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர் கவுண்டமணிதான். ஆனால், இதே கவுண்டமணி துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்ட ஒருவர்தான். பல வருடங்கள் நாடகங்களில் நடித்திருக்கிறார். பாக்கியராஜின் அறிமுகம் கிடைத்து அவர் மூலம் சினிமாவில் நடிக்க வந்தவர்தான் கவுண்டமணி.
பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது பாக்கியராஜ்தான். இப்போதும் கவுண்டமணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். 80 கிட்ஸ்கள் பெரும்பாலும் கவுண்டமணி காமெடியையே ரசிக்கிறார்கள்.
இந்நிலையில், காமெடி நடிகர் அனுமோகன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிகொண்டிருந்த காலத்தில் கவுண்டமணி ஒரு டீ பண்ணுக்கே மிகவும் கஷ்டப்பட்டார். நாடகத்துல நடிச்சி 5 ரூபா சம்பளம் வாங்கிட்டு வந்து அதுல 2 ரூபா கூட இருந்தவங்களுக்கு செலவு பண்ணுவாரு. சாப்பாடு வாங்கி கொடுப்பாரு’ என சொல்லி இருக்கிறார்.



