சமீபத்தில் தனுஷ் நடித்த அசுரன் 100வது பட விழாவில் பேசிய நடிகர் பவன், தற்பொதெல்லாம் எந்த படமும் 100 நாட்கள் ஓடுவதில்லை. கடைசியாக குருவி படம் 150 நாட்கள் ஒடியது எனக்கூறினார்கள். அது உண்மையா எனதெரியவில்லை என சிரித்துகொண்டே கூறினார். இது மேடையில் அமர்ந்திருந்த தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் பலரும் நடிகர் பவனை சமூக வலைத்தளங்களில் திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில், எந்த உள்நோக்கத்துடன் அப்படி கூறவில்லை. யாரையும் கிண்டலடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி பேசியதற்காக விஜயிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…