
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியான ‘டெடி’ திரைப்படம் ஓடிடியில் அதிகம் பேரால் திரும்ப திரும்ப பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை அதிகம் பார்த்து ரசித்துள்ளனர். அதேபோல், விஜய் தொலைக்காட்சியில் இப்படம் வெளியானால் 11.5 புள்ளி வரை டி.ஆர்.பி எகிறுகிறதாம். எனவேதான் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வட்டாரத்தில் ஆர்யா திரைப்படங்களுக்கு மவுசு கூடியுள்ளது. அதேபோல், ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆர்யா மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இது டெடி 2ம் பாகம் இல்லையாம். அதிரடி ஆக்ஷன் கதை எனக்கூறப்படுகிறது.