மீண்டும் நடிக்கவரும் ‘பகல் நிலவு’ சீரியல் நடிகர் அசீம்…

பகல் நிலவு சீரியலில் அர்ஜூன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென குறிப்பிட்ட ரசிகர்களை உருவாக்கியவர் நடிகர் அசீம். சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு சென்ற அவர் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் ஒன்றில் புதிதாக இணைவதன் மூலம் மீண்டும் சன் டிவிக்கு திரும்பியுள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் அவர் நடிக்கவுள்ளார். அந்த சீரியலில் நடித்து வந்த அருண் சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகினார். எனவே, அவருக்கு பதில் அசீம் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
 

Published by
adminram