இயக்குனர் மணிரத்னம் தற்போது பலரும் தொட தயங்கிய மற்றும் எடுக்க முடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் தயாரித்து வருகிறது.
பாகுபலியை போல் இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, அமலாபால் என பெரிய நடிகர், நடிகையர் பட்டாளமே நடித்து வருகிறது.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பாபு ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘அஞ்சலி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர். மேலும், பூவிழி வாசலிலே, சூரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 30 வருடம் கழித்து அவர் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…