தேவர் மகன் படத்தைப் பார்த்து விட்டு நடிகர் செய்த காரியத்தைப் பாருங்க... அதுக்காக மனுஷன் இப்படியா பண்ணுவாரு?

by ராம் சுதன் |

நடிகரும், உதவி இயக்குனருமான பகவதி பெருமாள் தனது திரையுலக அனுபவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். அதில் வேடிக்கையான சில விஷயங்களைப் பற்றி அவரே சொல்லக் கேட்போம்.

சில படங்கள் வேற ஒரு உலகத்தைக் காட்டும். மூன்றாம்பிறை, நாயகன், மௌனராகம், முள்ளும் மலரும், கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை. நடிக்கிறதுக்கு அழகு கிடையாது. எனக்கு சின்ன வயசுல பிம்பிள்ஸ் வந்தது. எனக்கு வந்து கண்ணு பெரிசா இருக்கும். வீட்டுல எனக்கு வச்ச பட்டப்பெயர் முண்டக்கண்ணன்.

அதனால நான் கண்ணை சின்னதா வச்சிக்கிட்டு நடப்பேன். நான் படிக்கும்போது ரெண்டு கர்சீப் வச்சிருப்பேன். பிம்பிள்ஸ்ச மறைச்சிக்கிட்டு இருப்பேன். என்னையே நான் பார்க்கணும்னு ஆசைப்பட மாட்டேன். அப்புறம் பொண்ணுங்க எப்படி பார்க்கும்? அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். வேற வழியில்லை. சினிமாவுக்கு நான் நடிக்க வரும்போது எனக்கு அது பெரிய பாசிடிவ்வா மாறுது. அந்தக் கண்ணு நினைச்சதை எல்லாம் காட்டுதுங்கன்னு சொல்லும்போது தான் யோசிச்சேன். இன்னொன்னு எனக்கு மூக்கு நல்லா இருந்தது.

தேவர்மகன் படம் பார்க்கும்போது நாசர் சாரும், கமல் சாரும் நிப்பாங்க. அப்போ நாசர் சார் மூக்கு ரொம்ப ஷார்ப்பா வரைஞ்சி வச்ச மாதிரி இருக்கும். நானும் அது மாதிரி வரணும்னு மூக்கைத் தடவிக்கிட்டே இருப்பேன். நல்லா நேரா இருந்த மூக்கு இப்போ இப்படி இருக்கு என சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

நம்ம பிறந்ததே கரெக்டா தான் பொறந்துருக்கோம். ஏதோ குறைபாடு இருந்தா கூட அது ஸ்பெஷல். நடிக்க வருதுக்கு முகம் தேவையே இல்ல. உலகத்தை எந்தளவுக்கு புரிஞ்சுக்கறீங்க? அந்தக் கதாபாத்திரத்தை எப்படி வெளிப்படுத்துறீங்க? அதை எவ்வளவு கரெக்டா செய்யறீங்க?

அது ஒரு ரூல். நாம பிறந்தது தன்மையாகத் தான் பிறந்துருக்கோம். நம்ம மாதிரி உலகத்துல வேறொருத்தர் கிடையாது. அறிவுங்கறது நாம கத்துக்கிட்டு வாழ்க்கையை அனுபவிச்சி புரிஞ்சிக்கும்போது வந்துரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story