அஜித்தின் தம்பிக்கு இரண்டாவது திருமணம்? வைரலகும் புகைப்படம்!

by adminram |

ae04d5971b0121dac3af40ddfe949361

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'அன்பு' திரைப்படத்தின்மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாலா. வித்யாசாகர் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக 'தவமின்றி கிடைத்த வரமே' என்ற பாடல் பலருக்கும் ஃபேவரைட்.

இப்படத்தையடுத்து இவர் காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம் என சில படங்களில் நடித்தார். பின்னர் இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் மலையாலைப்படங்களில் நடிக்க சென்றுவிட்டார். மலையாலத்தில் கிட்டத்தட்ட 40 படங்ககளில் நடித்துவிட்டார்.

d385922b120646e4488a32804364f265-2
Actor Baka

நீண்ட இடைவேளைக்குப் பின் இவர் தமிழில் இவர் அஜித் நடித்த வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். அஜித், தமன்னா நடித்திருந்த இப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நான்குபேர் நடித்திருந்தனர். அந்த நால்வரில் ஒருவராக பாலா நடித்திருந்தார். இன்னொரு தம்பியாக விதார்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்பக்கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. பாலா, வீரம் படத்தை இயக்கிய சிவாவின் உடன்பிறந்த தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் கைவசம் புதிய படங்கள் ஏதும் இல்லை.

கடைசியாக தமிழில் இவர் 2019ல் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் வெளியான தம்பி படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். பாலா 2010ல் அம்ருதா என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2019ல் அவரை விவாகரத்து செய்தார்.

d3718097c0f28b09904dbd3d50a8881f
Actor Baka

இதன்பின் பாலா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில் சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நேற்று (செப்.5) இவர்களது திருமண வரவேற்பு கேரளாவில் நடைபெற்றது.

Next Story