சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2023ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய திரைப்படம்தான் ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினியுடன் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு, ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடிக்க கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய எல்லா மொழிகளும் நல்ல வசூலை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதே சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கி வருகிறார். முதல் பாகம் போலவே இந்த படத்திலும் மற்ற மொழிகளிலிருந்து முக்கிய நடிகர்களை கேமியோ வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தது. இதில் மோகன்லாலும், சிவ்ராஜ்குமாரும் நடிக்க ஒப்பு கொண்டார்கள். தெலுங்கிலிருந்து பாலையா நடிப்பதாகவும் அவருக்கு 20 கோடி சம்பளம் எனவும் செய்திகள் வெளியானது.
ஆனால் திடீரென ஜெயிலர் 2-வில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிற செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பல நடிகர்களும் உள்ளே இருக்க ‘இன்னும் எத்தனை நடிகர்கள்தான் இந்த படத்தில் நடிப்பார்கள்?’ என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
இந்நிலையில்தான் ஒரு உண்மை தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தில் பாலையா நடிக்கவிருந்த நிலையில் என்ன நினைத்தாரோ ‘இந்த படத்தில் நடிக்க முடியாது’ என மறுத்துவிட்டாராம். இதையடுத்தே அவர் நடிக்கவிருந்த வேடத்தில்தான் விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார்கள். இது தொடர்பன ஷூட்டிங் கடந்த சில நாட்களாக கோவாவில் நடைபெற்று வருகிறது.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…