தெலுங்கு சினிமாவில் அதிரடி ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலகிருஷ்ணா என்கிற பாலையா. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அகாண்டா 2 திரைப்படம் வருகிற 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 தியேட்டர்களில் படம் வெளியாகவுள்ளது.
இந்த படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அதில் பாலையாவும் கலந்து கொண்டு தமிழில் பேசி அசத்தினார். ஏற்கனவே எனக்கு 2 தொடர் ஹிட் படங்கள் அமைந்த நிலையில் அகாண்டா 2-வும் வெற்றிப் படமாக அமையும். சென்னைக்கு வருவது என் சொந்த வீட்டுக்கு வருவது போல.. இங்குதான் நான் பிறந்தேன்.. சென்னை எனக்கு ஜென்ம பூமி.. தெலுங்கானா எனக்கு கர்ம பூமி.. ஆந்திரா எனக்கு ஆத்ம பூமி என்றெல்லாம் உணர்ச்சி பொங்க பேசினார்.
இந்நிலையில்தான் இந்த விழா தொடர்பாக நடந்த ஒரு சம்பவம் வெளியே தெரிய வந்திருக்கிறது. சுகுமார் சீனிவாசன் என்கிற ஊடகவியாளர் இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பாலையா செய்த ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அகாண்டா 2 தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மாலை 1.30 மணிக்கு நடந்தது. ஸ்டுடியோவின் அருகிலேயே ஒரு ஸ்டார் ஹோட்டலில் பாலையாவுக்கு ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஸ்டுடியோவுக்குள் அவர் தயாராக கேராவானும் ரெடியாக இருந்தது. அவருக்கு பிடித்த உணவும் தயாராக இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பாலையா நேற்று காலை 8.30 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையம் வந்தார்.
அவருக்கு 10 மணிக்கு விமானம். ஆனால் புயல் காரணமாக விமானம் தாமதமானது. அவர் காலை சாப்பிட்டாரா என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அவர் அங்கே விமானத்திற்காக காத்திருந்தபோது சென்னையில் செய்தியாளர்களும் ஊடகங்களும் அவருக்காக காத்திருந்தனர்.
விமானம் 4 மணி நேரம் தாமதமாகி அவர் சென்னை வந்து இறங்கிய போது கண்டிப்பாக பசியில்தான் இருந்திருப்பார். செய்தியாளர்களும், ஊடகங்களும் அவருக்காக காத்திருந்த செய்தி அவரிடம் சொல்லப்பட்டதும் அவர் ஹோட்டலுக்கு செல்லாமல் நேராக பிரசாத் வீடியோவுக்கு வந்தார். அங்கிருந்த கேராவனுக்கும் அவர் செல்லாமல் நேரடியாக செய்தியாளர்கள் காத்திருந்த அறைக்கு வந்து விட்டார்.
நிகழ்ச்சி முடிந்தபின் அவரை சாப்பிட்டு செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறினார்கள். ஆனால் அவரோ எனக்கு 5.30 மணிக்கு பிளைட். நான் செல்லவேண்டும் என சொல்லிவிட்டு சிரித்தபடியே காரில் ஏறி சென்று விட்டார். பாலையாவுக்கு 65 வயதாகிறது. எல்லோரும் இதை பின்பற்ற வேண்டும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…