More

அந்த நடிகர் சரக்கடிக்க கூப்பிட்டார் – உண்மையை போட்டு உடைத்த ஆனந்தராஜ்

அதிமுகவில் ஆர்வமுடைய அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்து வந்தார். ஜெ.வின் மறைவுக்கு பின் அக்கட்சியிலிருந்து விலகி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertising
Advertising

வில்லனாக நடிப்பதை விட்டுவிட்டு காமெடி கலந்த வில்லனாக கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. எனவே, தற்போது அந்த ரூட்டிலேயே பயணித்து வருகிறார். ராம் பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘இடியட்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்திலும் காமெடி வேடத்தில் ஆனந்தராஜ் நடித்துள்ளார்.

anandaraj

இந்த விழாவில் பேசிய ஆனந்தராஜ் ‘ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது ஹைதராபாத்தில் தங்கியிருந்தேன். படப்பிடிப்பு முடிந்த போது அப்படத்தின் ஹீரோ ‘உங்கள் அறைக்கு கார் வரும். அவரோடு வாருங்கள்’ என கூறினார். நானும் குளித்து ரெடியாகி காத்திருந்தேன். கார் வரவே காரில் ஏறி சென்றேன். ஒரு சிக்னலில் கார் நின்ற போது மீண்டும் ஹீரோவிடமிருந்து போன் வந்தது.

உங்களுக்கு என்ன பிராண்ட் வேணும் என கேட்டார். எனக்கு புரியவில்லை. அதன்பின்னர்தான் அவர் என்னை மது அருந்த அழைத்திருப்பதை புரிந்து கொண்டேன். ஐயோ எனக்கு பழக்கமில்லை’ எனக்கூறினேன். உடனே, டிரைவரிடம் அவர் ஏதோ பேசினார். அதன்பின் வண்டி யுடேர்ன் போட்டு நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்றது. என்னை இறக்கிவிட்டு அவர் சென்றுவிட்டார். இப்படி கெட்ட பழக்கங்கள் இல்லாததால் சில வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்’ என அவர் பேசினார்.

Published by
adminram

Recent Posts