தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன்பின் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அசுரன் திரைபப்டத்தில் அவரின் நடிப்பிற்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் செல்வராகவன் இயக்கத்திலும். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.
இன்று தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எனவே, தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் அவரின் பிறந்தநாளை கொண்டாட தயாராகிவிட்டனர். தனுஷின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக டிவிட்டரில் ஒரு காமன் டிபியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தனுஷின் சகோதரரும், இயக்குனருமான செல்வராவன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த டிபியில் தனுஷை வரலாற்று நாயகன் போல் சித்தரித்துள்ளனர். ஒரு நாணயத்தில் தனுஷ் முகமும், கிரேக்க மன்னர்கள் அணிந்திருக்கும் உடை போல அவரின் உடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…