பல கோடி பட்ஜெட்.. ரூ.30 கோடி சம்பளம்… தனுஷின் தெலுங்கு பட அப்டேட்….

நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். தற்போது அவரின் கையில் 5க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறது. அவரின் நடிப்பில் உருவான அசுரன், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் அவர் பெற்றார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

தனுஷ் தற்போது ‘The Grey Man’ என்கிற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். அப்படம் முடிந்த பின் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகவுள்ளது. அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிக்க தனுஷுக்கு ரூ.30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதனால்தான் அண்ணன் படத்தை கிடப்பில் போட்டுவிட்டார் என செய்திகள் கசிந்துள்ளது. 

தனுஷ் ரூ.15 கோடி சம்பளம் பெற்று வருகிறார். அதை 2 மடங்காக கொடுத்ததால் அண்ணன் படத்தை விட்டு விட்டு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் எனக்கூறப்படுகிறது. தனுஷ்க்கு இது முதல் நேரிடையான தெலுங்கு திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Published by
adminram