ரஜினி பணத்தில் தனுஷா?.. சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு சொல்லிட்டாரு... மாஸ்டர் மைண்ட் தான் போங்க...!
தமிழில் மிகப் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருக்கின்றார். இந்த படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பவர் பாண்டி என்ற திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் இயக்கும் 50-வது திரைப்படம் ராயன். இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆடியோ லான்ச்சில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் நடிகர் தனுஷ். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "எந்த பிரபலத்துக்கு விவாகரத்து ஆனாலும் அதற்கு நான் தான் காரணம் என்கின்ற அளவுக்கு youtube - இல் பேச ஆரம்பித்து விட்டனர்.
நான் யாருன்னு எனக்கு தெரியும், என்னை படைச்ச அந்த சிவனுக்கு தெரியும். என் அப்பா அம்மாவுக்கு தெரியும். என் பசங்களுக்கு தெரியும். தன்னைப் பற்றி பின்னாடி பேசுபவர்கள் பற்றியும், முதுகில் குத்துபவர்கள் பற்றியும் எனக்கு எந்த கவலையும் கிடையாது. மேலும் போயஸ்கார்டனில் நான் ஏன் வீடு கட்டினேன். சிறு வயதில் எனக்கு தலைவர் வீட்டை பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆசை இருந்தது.
அப்போது போயஸ் கார்டனுக்கு சென்றேன். தலைவர் ரஜினி அவரின் வீட்டையும் ஜெயலலிதாவின் வீட்டையும் எட்டி எட்டிப்பார்த்தேன். அந்த சமயத்தில் எனக்கு ஒரு ஆசை வந்தது. எப்படியாவது போயஸ் கார்டனில் ஒரு வீடு கட்டி விட வேண்டும் என்று ஆசை வந்தது. அந்த 16 வயது வெங்கட் பிரபுக்கு நான் கொடுத்த பரிசு தான் அந்த வீடு என்று ஆடியோ லாஞ்சில் நடிகர் தனுஷ் பேசியிருந்தார்.
இதை கேட்ட பலரும் இந்த சமயத்தில் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது என கூறி வந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பான விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது நடிகர் தனுஷ் ரஜினி மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். அந்த வீட்டின் பூமி பூஜையின்போது நடிகர் ரஜினி, மனைவி லதா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வீடு கட்ட தொடங்கி சில மாதங்களுக்கு பிறகு தான் ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து சென்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனுஷுக்கு வீடு கட்டுவதற்கு காசு கொடுத்ததாகவும், அவரது சம்பாத்தியத்தில் தான் தனுஷ் இப்படி ஆடம்பரமான வீட்டை கட்டி இருக்கிறார் என்றும் பலரும் பலவிதமாக கூறி வந்தார்கள்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் நடிகர் தனுஷ் அந்த ஆடியோ லாஞ்சில் போயஸ் கார்டன் வீடு குறித்து பேசி இருந்தார். மேலும் இது தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் கஷ்டப்பட்டு உழைத்துக் கட்டிய வீடு என்று தெரிவித்திருந்தார். இந்த விளக்கம் அந்த நேரத்தில் தேவையானது தான் என்று பிரபல வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.