16 வயதில் தனுஷ் மனதில் பதிந்த பாடம்... வேட்டையனை வீழ்த்த நினைத்தாரா சுள்ளான்?

by ராம் சுதன் |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் ஆனதும் தனுஷ் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. தனுஷின் அப்பா, அம்மா ரஜினியின் வீட்டுக்கு வந்தால் சரிவர கவனிப்பதில்லை என்ற பேச்சுகள் எல்லாம் வந்தன. அதே நேரம் தனுஷ் ரஜினியின் மருமகன் ஆனதற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. துள்ளுவதோ இளமை படத்தில் தான் அறிமுகம் ஆனார் தனுஷ்.

ஆரம்பத்தில் திரையுலகில் இவரைப் பார்ப்பதற்கு ஒரு சுள்ளான் போல தான் இருப்பார். இவர் படத்திற்கே சுள்ளான் என்ற பெயரையும் வைத்தார்கள். இவர் ஆடிய மன்மத ராசா பாடலை யார் தான் மறக்க முடியும்? இவரெல்லாம் எப்படி ஹீரோவானார்? எல்லாம் பேக்ரவுண்டு தான் காரணம் என்றெல்லாம் பேசினார்கள். இவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன். தந்தை இயக்குனரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா.

Also Read: நான் 8ம் வகுப்பு வரை பாஸ் செஞ்சிருக்கேனா அதுக்கு காரணம் தனுஷ்தான் ! பிரபலம் சொன்ன ஷாக் தகவல்

அப்படி இருக்கும்போது தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது தனுஷ் சமீபத்தில் போயஸ் கார்டனில் கட்டிய வீடு பேசுபொருளானது. இது ரஜினிக்கு தன்னோட பலம் என்ன என்பதைக் காட்டவே கட்டி இருக்கிறார் என்றெல்லாம் மீடியாக்களில் பேசப்பட்டன.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யாராய் தனது தந்தையின் வீடு அருகிலேயே வீடு வாங்கினால் அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று திட்டம் போட்டு இருந்தாராம். அதனால் தான் அவருக்காக அங்கு தனுஷ் வீட்டை வாங்கினாராம். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்தும் விட்டனர்.

தனுஷ் அந்த இடத்தில் 150 கோடியில் நவீன தொழில்நுட்பத்துடன் வீட்டைக் கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கான பூஜைக்குக் கூட ரஜினி குடும்பத்தில் உள்ள யாருக்குமே அழைப்பு இல்லை என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் தனுஷ் அழைத்ததாகவும் சொல்லப்படுகிறது. ரஜினி அவரது புது வீட்டுக்கு பூமி பூஜை போட்ட போது ரஜினி வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாம். தனுஷ் தனது பெற்றோருக்காக பார்த்துப் பார்த்து அந்த வீட்டைக் கட்டினாராம்.அந்தவகையில், போயஸ் கார்டனில் கட்டப்பட்ட தன் வீட்டைப் பற்றிய சர்ச்சைக்கு தனுஷ் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Also Read: சின்ன வயசிலேயே கெட்ட வார்த்தையில் கவிதை எழுதிய கமல்... அப்பாவின் ரியாக்ஷன் தான் ஹைலைட்!

எனக்கு 16 வயது இருக்கும்போது நான் போயஸ் கார்டன் தெருவுக்குச் சென்றேன். அங்கு இருந்த காவலர்களிடம் கெஞ்சி ரஜினி சார் வீட்டைப் பார்த்தேன். பக்கத்திலேயே ஜெயலலிதாவின் வீடும் இருந்தது. நாமும் போயஸ் கார்டனில் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று அப்போது ஆசை வந்தது. அந்த விதை அன்று விழுந்தது. அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவுக்கு இந்த தனுஷ் கொடுத்த பரிசு தான் போயஸ் கார்டனில் நான் கட்டிய வீடு என்று தெரிவித்துள்ளார்.

Next Story