ஏழை,பாழைங்க கல்யாணத்துல கூட... ஹனிமூனுக்காகவது தனியா போங்கப்பா... ஆனந்த் அம்பானியை கலாய்த்த தமிழ் பிரபலம்..!
இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி பிரபல தொழிலதிபரான வீரேன் மெர்ச்சண்ட் என்பவரின் மகள் ராதிகா மெர்ச்சண்டை கடந்த ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 3 நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு வெளிநாட்டை சேர்ந்த பிரபலங்கள் கொண்டார் . தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அது மட்டும் இல்லாமல் சூர்யா ஜோதிகா, விக்னேஷ் சிவன் நயன்தாரா, அட்லீ பிரியா, ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரின் மனைவி என பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். பாலிவுட்டை சேர்ந்த அனைத்து பிரபலங்களும் இந்த திருமணத்தில் தான் இருந்தார்கள். மேலும் கன்னட சினிமா பிரபலங்கள், தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
அது மட்டும் இல்லாமல் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று இந்த தம்பதிகளை வாழ்த்தி வந்தார்கள். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி திருமணத்தில் வந்து கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்த திருமணத்தில் மணமகள் மீது இருந்த கவனத்தை விட அங்கு வந்த பிரபலங்களின் மீது இருந்த கவனம் தான் அதிகம். இந்த திருமணத்திற்கு யார் யார் வந்திருக்கிறார்கள்? எப்படி உடை அணிந்து வந்திருக்கிறார்கள் என்பதை தான் பலரும் உற்று நோக்கி வந்தார்கள். மணமக்கள் மீது யாருடைய கவனமும் இல்லை என்பதுதான் இதில் நிதர்சனமான உண்மை. இதை விமர்சித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெகன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "ஏழைகளின் திருமணங்களில் கூட வந்திருப்பவர்களின் கவனம் மொத்தமும் மணமக்கள் மீது இருக்கும். ஆனால் ஆனந்த அம்பானி உங்கள் மீது யாருடைய கவனமும் இல்லை என்பது தான் பரிதாபமான உண்மை. எது எப்படியோ ஹனிமூனாவது தனியாக செல்லுங்கள்" என்று கலாய்க்கும் வகையில் போட்டிருந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.