Categories: latest news

ஏழை,பாழைங்க கல்யாணத்துல கூட… ஹனிமூனுக்காகவது தனியா போங்கப்பா… ஆனந்த் அம்பானியை கலாய்த்த தமிழ் பிரபலம்..!

இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி பிரபல தொழிலதிபரான வீரேன் மெர்ச்சண்ட் என்பவரின் மகள் ராதிகா மெர்ச்சண்டை கடந்த ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 3 நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு வெளிநாட்டை சேர்ந்த பிரபலங்கள் கொண்டார் . தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

அது மட்டும் இல்லாமல் சூர்யா ஜோதிகா, விக்னேஷ் சிவன் நயன்தாரா, அட்லீ பிரியா, ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரின் மனைவி என பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். பாலிவுட்டை சேர்ந்த அனைத்து பிரபலங்களும் இந்த திருமணத்தில் தான் இருந்தார்கள். மேலும் கன்னட சினிமா பிரபலங்கள், தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று இந்த தம்பதிகளை வாழ்த்தி வந்தார்கள். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி திருமணத்தில் வந்து கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்த திருமணத்தில் மணமகள் மீது இருந்த கவனத்தை விட அங்கு வந்த பிரபலங்களின் மீது இருந்த கவனம் தான் அதிகம். இந்த திருமணத்திற்கு யார் யார் வந்திருக்கிறார்கள்? எப்படி உடை அணிந்து வந்திருக்கிறார்கள் என்பதை தான் பலரும் உற்று நோக்கி வந்தார்கள். மணமக்கள் மீது யாருடைய கவனமும் இல்லை என்பதுதான் இதில் நிதர்சனமான உண்மை. இதை விமர்சித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெகன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “ஏழைகளின் திருமணங்களில் கூட வந்திருப்பவர்களின் கவனம் மொத்தமும் மணமக்கள் மீது இருக்கும். ஆனால் ஆனந்த அம்பானி உங்கள் மீது யாருடைய கவனமும் இல்லை என்பது தான் பரிதாபமான உண்மை. எது எப்படியோ ஹனிமூனாவது தனியாக செல்லுங்கள்” என்று கலாய்க்கும் வகையில் போட்டிருந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ராம் சுதன்

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

36 minutes ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

3 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

3 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

5 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

8 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

20 hours ago