Home > வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த காளிதாஸ் மரணம்.......
வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த காளிதாஸ் மரணம்.......
by adminram |
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் காளிதாஸ். திரைப்படங்களில் வில்லன் நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர். வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர். குறிப்பாக வடிவேலுவுடன் நடிக்கும் போது போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிப்பார். சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மரணம் அடைந்தார். இந்த செய்தியை குணச்சித்திர நடிகர் மோகன் ராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் குரலை இனிமேல் கேட்க முடியாது. நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், வில்லன்களுக்கு தனது குரல் மூலம் சக்தி கொடுத்தவர் இறந்துவிட்டார்’ என பதிவிட்டுள்ளார்.
அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story