கீழே விழுந்து காலில் படுகாயம்! – நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் 80,90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர். திறமையான நடிகர் என பெயரெடுத்தவர். நவரச நாயகன் என சினிமாத்துறையினரால் அழைக்கப்பட்டவர். படப்பிடிப்புகளில் ஒழுங்காக கலந்து கொள்ளாததால் மார்க்கெட்டை இழந்தவர். அவரின் மகன் கௌதம் கார்த்திக் நடிகராக களம் இறங்கி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே, அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

Published by
adminram