காதலியை கரம் பிடித்த நடிகர் மஹத் – வைரலாகும் திருமண வீடியோ

மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அவர் நீண்ட வருடங்களாக பிராச்சி மிஷ்ரா என்கிற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர்களின் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மஹத்தின் நெருங்கிய நணபரான நடிகர் சிம்பு இத்திருமணத்தில் கலந்து கொண்டார்.

Published by
adminram