மரண மாஸ் லுக்கில் நடிகர் மயில்சாமி – வைரல் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கும் மேல் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. நடிப்பது மட்டும் தன் வேலை என்றில்லாமல் சமூக அக்கறை கொண்டவர். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு அனல் பறக்கும் கருத்துக்களை முன் வைப்பவர்.

சமீபத்தில் இவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

இதற்கு முன் மறைந்த நடிகர் விவேக், கருணாஸ், சென்ராயன், மனோபாலா உள்ளிட்ட பலரையும் வித்தியாசமான கோணத்தில் போட்டோஹூட் நடத்தப்பட்டு புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram