Connect with us

latest news

ரத்தக்கண்ணீருக்கு அப்புறமா எம்.ஆர்.ராதாவுக்கு வனவாசம் தான் போல… ஆனாலும் கெத்து குறையலயே..!

நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த படம் ரத்தக்கண்ணீர். இது 1954ல் வெளியானது. இந்தப் படம் வெளியானதும் ….

14 ஆண்டுகளாக எம்.ஆர்.ராதாவுக்கு எந்தப் பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

அதன்பிறகு ‘நல்ல இடத்து சம்மந்தம்’ என்ற படம் இவருக்கு வந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்திலே எம்.ஆர்.ராதாவை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் அவர் ஒழுங்காகப் படத்தை முடித்துத் தருவாரா? படப்பிடிப்புக்கு ஒழுங்கா வருவாரா என்ற சந்தேகம் எல்லாம் தயாரிப்பாளர் மத்தியில இருந்தது.

ஆனால் அவரைப் பற்றி எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிலே அந்தப் படத்தின் படப்பிடிப்பிலே கலந்து கொண்டார் எம்.ஆர்.ராதா என்பது தான் உண்மை. நல்ல இடத்து சம்மந்தம் படப்பிடிப்பு நடந்தபோது மொத்தப் படப்பிடிப்புக் குழுவினரையும் காலை 5 மணிக்கு எழுப்பி ஸ்டூடியோவுக்கு அழைத்து வருவதைத் தன் வேலையாக வைத்து இருந்தாராம் எம்.ஆர்.ராதா.

காலை 8 மணிக்கு நடக்கும் படப்பிடிப்பு சில வேளைகளில் நள்ளிரவையும் தாண்டி நடக்கும். ஆனாலும் மறுநாளில் படப்பிடிப்புக்கு டான் என்று சரியான நேரத்திற்கு வந்து விடுவாராம். இப்படி வேகமாக வேலை செய்ததால் தான் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து 50வது நாளில் வெளியானது.

படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு காலகட்டத்தில் ஒருவர் சினிமா எடுக்கணும்னா 3 முக்கிய விஷயங்கள் தேவை. ஒண்ணு பணம். இரண்டாவது துணிவு. மூணாவது எம்.ஆர்.ராதா என்ற நிலை உருவானது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடியதுதான்.

1960களில் திரைப்படத் தயாரிப்பாளர்களால் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் தான் எம்.ஆர்.ராதா. மேற்கண்ட தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

எம்.ஆர்.ராதாவை தமிழ்த்திரை உலகில் நடிகவேள் என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் அவரது தரமான ஸ்டைலான நடிப்பு தான். இவரைப் போல அதற்கடுத்து எவராலும் நடிக்க முடியவில்லை. சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் மட்டும் அவரது சாயலில் காமெடியாக சில டயலாக்குகளைப் பேசி அசத்துவார்.

எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் படத்தில் அவ்வளவு அனாயாசமாக ஒவ்வொரு காட்சியிலும் நடித்துத் தூள் கிளப்பியிருப்பார். அப்படி இருந்தும் அவருக்கு 14 ஆண்டுகளாக படமே கிடைக்கவில்லை என்பது ஆச்சரியம். அந்த அளவுக்கு அவரைப் பற்றிய தவறான கருத்துகள் வந்த போதும் அதை எல்லாம் எதிர்கொண்டு சாதித்துக் காட்டியது தான் எம்.ஆர்.ராதாவின் தனித்திறன் என்றே சொல்லலாம்.

google news
Continue Reading

More in latest news

To Top