இது வேற லெவல்!.. கோட் சூட்டில் மனைவியுடன் போஸ் கொடுத்த நகுல்....

இது வேற லெவல்!.. கோட் சூட்டில் மனைவியுடன் போஸ் கொடுத்த நகுல்....

By :  adminram
Update: 2021-02-09 11:03 GMT

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் தனது குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமை மிக்கவராக இருந்து வரும் நகுல் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில், கோட் சூட் அணிந்து மனைவியுடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.