Categories: latest news

தளபதி 69 படத்தில் இணைந்த ‘கைதி’ பட நடிகர்.. எச்.வினோத்தின் குக்கிங் வேற மாதிரிதான்

Thalapathy69: பெரிய நடிகரின் படம் என்றாலே அந்த படத்தை பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு விருந்தாகத்தான் இருக்கும். அந்த வகையில் விஜய் கடைசியாக நடிக்கும் திரைப்படம் தளபதி 69. இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும் விஜயின் கடைசி படங்களான வாரிசு, லியோ, பீஸ்ட் ஆகிய எல்லா திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றன. ஆனால் வசூலில் எப்போதும் போல தான் தான் சக்கரவர்த்தி என நிரூபித்தார் விஜய். அதனைத் தொடர்ந்து இது அவருடைய கடைசி படம் என்பதால் அனைவரின் பார்வையும் இந்த படத்தின் மீதுதான் திரும்பி இருக்கிறது. இன்னொரு பக்கம் அரசியல் நிகழ்வுகளிலும் விஜய் தான் யார் என்பதை காட்டி வருகிறார்.

தெளிவான விஜய்:அவர் நடத்திய மாநாட்டிலும் சரி சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக விழாவிலும் சரி தன்னுடைய அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் தளபதி 69 படமும் அரசியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம் தான் என சிலர் கூறி வருகிறார்கள். ஏனெனில் எச் வினோத் ஏற்கனவே ஒரு பேட்டியில் விஜய் வைத்து ஒரு தரமான அரசியல் படத்தை தான் எடுப்பேன் என ஒரு பழைய பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் தீவிரமாக அரசியலில் இறங்க இருப்பதால் கண்டிப்பாக அதற்கேற்ற வகையில் தான் எச் வினோத் படத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். பிரபல ஹிந்தி நடிகர் பாபி தியோலும் இந்த படத்தில் நடிக்கிறார்.

கைதி பட நடிகர்: இந்த நிலையில் தளபதி 69 படத்தில் நடிகர் நரேன் இணைந்திருக்கிறார் என சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது .அது அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தளபதி 69 ஆவது படத்தில் கூடிய சீக்கிரம் நான் இணைய இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்திற்கு பிறகு கைதி 2 படமும் தயாராக இருக்கிறது என நரேன் கூறி இருக்கிறாராம்.

நரேனை பொறுத்த வரைக்கும் ஒரு சிறந்த நடிகர். சமீப காலமாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் விக்ரம் திரைப்படத்திலும் அவருடைய கேரக்டர் கவனம் பெற்றவையாக அமைந்தன. அதனால் தளபதி 69 படத்திலும் நரேனுக்கு ஏற்ற வகையில் தான் வினோத் கேரக்டரை வடிவமைத்திருப்பார் என தெரிகிறது.

ராம் சுதன்

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

7 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

7 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

13 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

15 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

15 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

17 hours ago