மகனின் கல்யாணத்துக்காக நெப்போலியன் செய்யப்போகும் வேற லெவல் சம்பவம்...

by ராம் சுதன் |

நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் நெப்போலியனின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அமைச்சர் நேருவின் உதவியாளரான இவர் பாரதிராஜாவின் 'புதுநெல்லு புதுநாத்து' படத்தில் அறிமுகமானார். அதில் வில்லன் வேடம் ஏற்கிறார். 25 வயசு நெப்போலியன் 65 வயசு முதியவராக வருகிறார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு மாஸ். பின்னர் ரஜனி, கமல், பிரபு என எல்லா நடிகர்களுடனும் வில்லனாக நடித்து விட்டார்.

குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ஜெயசுதா என்பரைத் திருமணம் செய்தார். குணால், தனுஷ் என இருமகன்கள் உள்ளனர். இவர்களில் தனுசுக்கு தசை பிறழ்வு நோய் இருந்தது. மகனுக்கு எல்லா இடத்திலும் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.

திருநெல்வேலியில் இயற்கை வைத்தியம் பார்த்தார். அங்கு கொஞ்சம் குணமானது. அதனால் குற்றாலம் அருகில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச மருத்துவனையைக் கட்டினார். மகனின் நல்வாழ்வுக்காகவே அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

இப்போது தனுசுக்கு வயது 25. அவரால் நடக்க முடியாது. அதனால் நிச்சயதார்த்தத்தைக்கூட வீடியோ காலில் நடத்தினார்கள். நெல்லை மாவட்டம் மூலக்கரைப் பட்டியில் விவேகானந்தர் என்பவரது மகள் அட்சயா தான் மணமகள். திருமணம் எப்போது என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டார்.

மணமகளை அமெரிக்காவில் அழைத்துச் சென்று திருமணம் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கப்பலில் வர வேண்டுமானால் 6 மாசமாகும். ஆனால் இடையில் ஒரு தகவல் வந்தது. அமெரிக்காவில் இருந்து வர ஒரு ஆடம்பர கப்பலை புக் பண்ணியிருக்கிறாராம்.

மணமகன் இங்கு வந்து மணமகளைத் திருமணம் செய்து கொண்டு அழைத்துச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கொண்டே 2 ஆங்கிலப்படங்களிலும் நெப்போலியன் நடித்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story