Categories: latest news

மகனின் கல்யாணத்துக்காக நெப்போலியன் செய்யப்போகும் வேற லெவல் சம்பவம்…

நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் நெப்போலியனின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அமைச்சர் நேருவின் உதவியாளரான இவர் பாரதிராஜாவின் ‘புதுநெல்லு புதுநாத்து’ படத்தில் அறிமுகமானார். அதில் வில்லன் வேடம் ஏற்கிறார். 25 வயசு நெப்போலியன் 65 வயசு முதியவராக வருகிறார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு மாஸ். பின்னர் ரஜனி, கமல், பிரபு என எல்லா நடிகர்களுடனும் வில்லனாக நடித்து விட்டார்.

குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ஜெயசுதா என்பரைத் திருமணம் செய்தார். குணால், தனுஷ் என இருமகன்கள் உள்ளனர். இவர்களில் தனுசுக்கு தசை பிறழ்வு நோய் இருந்தது. மகனுக்கு எல்லா இடத்திலும் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.

திருநெல்வேலியில் இயற்கை வைத்தியம் பார்த்தார். அங்கு கொஞ்சம் குணமானது. அதனால் குற்றாலம் அருகில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச மருத்துவனையைக் கட்டினார். மகனின் நல்வாழ்வுக்காகவே அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

இப்போது தனுசுக்கு வயது 25. அவரால் நடக்க முடியாது. அதனால் நிச்சயதார்த்தத்தைக்கூட வீடியோ காலில் நடத்தினார்கள். நெல்லை மாவட்டம் மூலக்கரைப் பட்டியில் விவேகானந்தர் என்பவரது மகள் அட்சயா தான் மணமகள். திருமணம் எப்போது என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டார்.

மணமகளை அமெரிக்காவில் அழைத்துச் சென்று திருமணம் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கப்பலில் வர வேண்டுமானால் 6 மாசமாகும். ஆனால் இடையில் ஒரு தகவல் வந்தது. அமெரிக்காவில் இருந்து வர ஒரு ஆடம்பர கப்பலை புக் பண்ணியிருக்கிறாராம்.

மணமகன் இங்கு வந்து மணமகளைத் திருமணம் செய்து கொண்டு அழைத்துச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கொண்டே 2 ஆங்கிலப்படங்களிலும் நெப்போலியன் நடித்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

Recent Posts

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

8 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

8 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

8 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

12 hours ago