அஜித், விஜய் இரண்டு பேருமே செய்வது ஸ்டன்ட்தான்!. இப்படி சொல்லிட்டாரே பார்த்திபன்!..

by சிவா |
அஜித், விஜய் இரண்டு பேருமே செய்வது ஸ்டன்ட்தான்!. இப்படி சொல்லிட்டாரே பார்த்திபன்!..
X

Ajith Vijay: எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் போட்டிக்கு பின் திரையுலகில் விஜய் - அஜித் போட்டி உருவானது. இருவருக்குமே தனிப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இதனால் எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களை போலவே ரஜினி - கமல் ரசிகர்களை போலவே விஜய் - அஜித் ரசிகர்களும் மோதிக்கொண்டு வருகிறார்கள்.

டிவிட்டரில் அசிங்கமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டிங் செய்தும், விஜய், அஜித்தை மார்பிங் செய்து அசிங்கப்படுத்தியும் புகைப்படங்களை உருவாக்கி பகிர்ந்து சந்தோஷப்பட்டு வருகிறார்கள். பல வருடங்களாகவே விஜயும், அஜித்தும் அதை கண்டுகொள்ளவில்லை. விஜய் அமைதியாகவே இருக்க அஜித்தே இதை முதலில் கண்டித்தார்.

ஒருவரை பாரட்டுவதற்காக மற்றொருவரை அசிங்கப்படுத்தாதீர்கள் என அறிக்கையே வெளியிட்டார். ஆனாலும், அவரின் ரசிகர்கள் அதை கேட்கவில்லை. ரசிகர்கள் விஷயத்தில் விஜயும் நிலைப்பாடும், அஜித்தின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருக்கிறது. ரசிகர்கள் தன்னை தேடி வரவேண்டும் என ஆசைப்படுபவர் விஜய். ரசிகர்கள் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது. அவர்கள் அவர்களின் வேலையை செய்தால் போதும் என நினைப்பவர் அஜித்.

இப்போது விஜய் அரசியலுக்கும் வந்துவிட்டதால் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக கட்சியை துவங்கி நடத்திய மாநாட்டில் எல்லா ரசிகர்களும் கலந்துகொள்ள வேண்டும் என விஜய் தரப்பில் சொல்லப்பட்டது. அதனால்தான் சுமார் 8 லட்சம் பேர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபனிடம் ‘வேலைக்கு லீவ் போட்டுவிட்டு மாநாட்டிற்கு வரவேண்டும் என விஜய் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், உங்களை வேலையை மட்டும் பாருங்கள் என அஜித் சொல்கிறார்கள். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் சொன்ன பார்த்திபன் ‘இருவரும் செய்வது ஸ்டண்ட்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. அவர்கள் பாதையில் அவர்கள் செல்கிறார்கள்’ என சொன்னார். மேலும், ‘விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் அஜித்துக்கு விருது கொடுத்திருப்பதற்கு பின்னால் அரசியல் காரணம் இருக்கிறதாக நினைக்கிறீர்களா?’ எனக்கேட்டதற்கு ‘எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது’ என பார்த்திபன் பதில் சொல்லியிருக்கிறார். மேலும், சீமான் பெரியார் பற்றி பேசிவருவது பற்றி கேட்டதற்கு ‘பெரியார் எவ்வளவு பெரியாராக இருந்தால் அவரை இப்போதும் திட்டுகிறார்கள். சீமான் அரசியல் செய்வதற்கே பெரியார்தான் தேவைப்படுகிறார்’ என கூறினார்.

Next Story