டைவர்ஸ் பற்றி ரொம்ப ஃபீல் பண்ணும் பார்த்திபன்.... பாவம் மனுஷனோட மனசை எவ்ளோ பாதிச்சிருக்கு...!

by ராம் சுதன் |

நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் என்ன காரணத்தாலோ இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தான் இது. காதல், டைவர்ஸ், ஒன்சைடு லவ் என எல்லாவற்றையும் வரிந்து கட்டிக் கொண்டு பேசியுள்ளார். பார்க்கலாமா...

என் மனைவியின் மேல் வச்ச காதல் உலகத்தின் உச்ச பட்ச காதல். அதுல எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. நான் நிறைய தவறு பண்ணிட்டேன். முதல்ல எனக்கு அவங்கள எவ்ளோ பிடிக்கும்னா அவங்களை நாம கல்யாணமே பண்ணிக்கக்கூடாது. அவங்க பெரிய ஸ்டார் ஆகணும்னு தான் பிடிக்கும். அப்புறம் அவங்களுக்கு நடிக்க பிடிக்கல. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க நடிக்கணும்னு சொன்னபோது எனக்கு அதுல உடன்பாடு இல்லாம இருந்தது. குடும்பம் பிரிஞ்சிடுமோன்னு நினைச்சேன். அப்போ நான் அவ்ளா முட்டாளா இருந்தேன். இப்ப உள்ள மெச்சுரிட்டி இல்ல.

டைவர்ஸ்ங்கறது டெபனைட்டா மனசு ஒத்துப் போறதுதான். பிரிஞசிப் போயி அடுத்தடுத்த மூவ்மெண்டை எவ்வளவு ஹேப்பியா மாத்திக்கிடுறது.? கணவன், மனைவி ரெண்டு பேரும் பிரியலாம். ஆனா அம்மா அப்பா பிரியறதுல மட்டும் கொஞ்சம் பிரச்சனை இருக்கு. ஆனா நாம அப்படித்தான் நினைக்கிறோமே தவிர கல்யாணம் ஆனதும் ஒரு எமோஷனல்ல ரெண்டு மூணு குழந்தைகளைப் பெத்துக்கறோம்.

Also Read: பிரசாந்த் கல்யாணத்துக்கு ஜெயலலிதா வராததற்கு இதுதான் காரணமாம்.... பயில்வான் போட்ட குண்டு

இதெல்லாம் யோசிக்கிறதுக்கே இடம் இருக்காது. அதுக்கு அப்புறமும் ஒத்துவரலன்னா என்ன பண்ண முடியும்? வெறும் முகத்தை முகத்தைப் பார்த்துக்கிட்டு... இதெல்லாம் அந்தக் காலத்துல. இந்த காலத்துல அந்த மாதிரி யாரும் இருக்கத் தயாரா இல்லைன்னு நினைக்கிறேன். அப்புறம் இது அவங்கவங்க தனிப்பட்ட சுதந்திரம். நான் அதைப் பத்திக் கருத்து சொல்றது என்னோட கருத்தே தவிர இது எல்லாருக்கும் பொருந்துற கருத்துன்னு நான் சொல்ல மாட்டேன்.

நானும் குஷ்பூவும் காதலைப் பத்தி ஒரு விஷயம் பேசுனோம். அது வைரலாகி இருக்கும். உங்க காதலிக்கு நீங்க என்ன கொடுப்பீங்கன்னாங்க. காதல் கொடுப்பேன். காதல் என்பது அவளோட சுதந்திரம். அவள் வேற யாரையாவது விரும்புனா அவள் போறதுக்கு முழு மனதா நாம் சம்மதிக்கணும். இதைப் புடிச்சி வச்சா அதுக்கு பேரு காதல் கிடையாது.

இதை அப்பப்ப நான் எழுதுறேன். அப்ப தான் நினைக்கிறேன். நமக்குள்ள கூட காதல் இருக்கு போல. அது இன்னும் வத்திப் போகல. வத்திப் போச்சுன்னா வாழ்க்கையே வீண். ஆக்சுவலா ஒன்சைடு லவ் தான் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கு. அது கவிதை எழுத வைக்குது. உங்கள நம்ப வச்சி ஏமாத்துறான்னா அதுக்குப் பேரு ஏமாத்துறதுன்னு அர்த்தம்.

Also Read: எனக்கு சாப்பாட்டை விட பெட்ரூம் மேட்டர்தான் முக்கியம்!. சமந்தா சொன்ன வைரல் வீடியோ!..

நம்புற வரைக்கும் காதல் நம்ம கிட்ட விளையாடுது. நம்மள ஒரு சின்ன பொண்ணு விரும்புனா இதெல்லாம் சரியா வராது. வேணான்னு சொல்வோம். அவங்க இதெல்லாம் சரியா வரும்கற மாதிரி நம்மளை நம்ப வைப்பாங்க. சரியா வருமான்னு நினைக்கும்போது நாம முதல்ல சொன்னது நடக்கும். இந்த மாதிரி 10 காதலைப் பார்த்திருக்கேன். இப்பவும் பார்த்துக்கிட்டு இருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story