உஷாரான ஆளுதான் பிரசாந்த்!.. அந்த 2 இயக்குநர்கள் தான் அடுத்த டார்கெட்டாம்.. கிடைச்சா குருமா தான்!..
டாப் ஸ்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு காலத்தில் கொண்டாடிய நடிகர் பிரசாந்த் மீண்டும் தனது இடத்தை தக்கவைக்க முயற்சி செய்து வருகிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் படம் வெளியாகிறது.
2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா, தபு நடிப்பில் வெளியான அந்தாதுன் படத்தின் ரீமேக்தான் இந்த படம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆரம்பத்தில் சில இயக்குனர்கள் இந்தப் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசியாக தியாகராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
பிரசாந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். வில்லியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் படத்தை புரமோட் செய்யும் விதமாக பிரசாந்த் தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர்கள் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ரொம்பவே ஆசைப்படுவதாக பிரசாந்த் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் விஜய் மற்றும் அஜித்துக்கு கிடைக்காத ஷங்கர் பட வாய்ப்பு பிரசாந்துக்கு கிடைத்த நிலையில், ஐஸ்வர்யா ராய் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், பிரசாந்த் தற்போது சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு சரியான நேரம் பார்த்து வலை விரித்துள்ளார் என்று கூறுகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் பிரசாந்த் நடித்துள்ள நிலையில், கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களில் கேமியோ ரோல் கிடைத்தால் சூப்பராக இருக்கும் என்கின்றனர். சோலோவாகவும் பெரிய இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க பிரசாந்த் முயற்சித்து வருகிறாராம்.