சாவித்திரி அவர கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாம்.. நான் பார்த்த காட்சி.. கண் கலங்கிய பிரபலம்..!

by ramya suresh |

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் ராஜேஷ். இவரின் உண்மையான பெயர் ஸ்வார்ட்ஸ் வில்லியம். சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த இவர் தனது 24 வயதில் 1979 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதுவரை 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இவர் தமிழில் கன்னி பருவத்திலேயே, பில்லா, அந்த 7 நாட்கள், தனிக்காட்டுராஜா, பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சின்ன திரையில் சீரியல்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் கதாநாயகிக்கு அப்பாவாக ராஜேஷ் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த அவர் சாவித்திரி குறித்து கூறியிருந்தார்.

அதுல அவர் தெரிவித்திருந்ததாவது: "அந்த ஏழு நாட்கள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு அருகே தான் சாவித்திரி அம்மாவின் வீடு இருப்பதாக கேள்விப்பட்டேன். உடனே அவரை பார்க்க சென்றேன். அப்போது வீட்டின் வேலைக்காரி ஜெமினி சாரிடம் போன் செய்து பேசினார். பிறகு ஜெமினி சார் உள்ளே செல்ல அனுமதி கொடுத்தார்.

அங்கு சாவித்திரியின் மகன் அமர்ந்திருந்தார். அவருக்கு ஒரு 13 வயது இருக்கும். என்னை அவர் சோகமாக பார்த்தார். உள்ளே சென்று நான் சாவித்திரி அம்மாவை பார்த்தேன். அப்படி ஒரு காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை, என்னால் அதனை வார்த்தையால் விவரிக்க முடியாது.

ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்து இது யார் என்று கண்டுபிடிக்க சொன்னால் கூட யாராலும் அது சாவித்திரி அம்மா தான் என்று கண்டுபிடிக்க முடியாத நிலைமையில் அவர் இருந்தார். அப்பதான் எனக்கு அவர் ஜெமினி சாரை காதலித்திருக்கவே கூடாது என்ற எண்ணம் வந்தது. அவ்வளவு தர்மங்களை செய்த சாவித்திரி அம்மா அப்போது வீடு, பணம் எல்லாவற்றையும் இழந்து தவிர்த்து வருகின்றார்.

அப்போது கூட டிரைவரிடம் கார் சாவியையும், காருக்கான டாக்குமெண்டையும் கொடுத்து இதை வைத்து நீ பிழைத்துக் கொள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அவருக்கான இந்த நிலைமையை நினைக்கும் போது என் கண்களில் தானாகவே கண்ணீர் வந்தது" என்று அந்த பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார்.

Next Story