விஜயகாந்த் சொன்னது அப்படியே நடந்தது... பெரிய ஜோதிடராம்... புதுத்தகவலை சொல்லும் பிரபல நடிகர்

by ராம் சுதன் |

நடிகர் ரவிகாந்த் பாலசந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள், சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கல்கி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து நாலு படம் நடித்துள்ளார். விஜயகாந்தை 'விஜி“ன்னு தான் அழைக்கிறார் நடிகர் ரவிகாந்த். இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கேப்டனைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

விஜியைப் பொருத்தவரைக்கும் அவர் பெரிய ஜோதிடர். இன்டஸ்ட்ரிலயே எனக்குத் தெரிஞ்சி மூணு பேரு தான் இருக்காங்க. அந்த வகையில் விஜி சொன்ன ரெண்டு மூணு விஷயங்கள் எனக்கு அப்படியே நடந்துச்சு. அவர் கூட வல்லரசு படம் பண்ணிக்கிட்டு இருந்தேன். பிரேக்ல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் சாப்பிடுவோம். என்ன நட்சத்திரம்னு கேட்டாரு. சொன்னேன். 'கால் பத்திரம். பார்த்துக்கடா'ன்னு சொன்னாரு. சொல்லி ரெண்டு மாசம் தான் இருக்கும். என் வலது கால் உடைஞ்சிடுச்சு. அடுத்த நாள் அவருக்குப் போன் பண்ணினேன். நான் சொன்னேன்லாடா உங்கிட்டன்னு கேட்டார்.

நான் கேரளா போய்க்கிட்டு இருக்கேன். கார் ஒரு பள்ளத்துக்குள்ள விழுந்து உருண்டு போகுது. எனக்கு ஒரு அடி கூட படல. சின்ன முள் கூட குத்தல. டிவில நியூஸ் போய்க்கிட்டு இருக்கு. ரவிகாந்த் ஆக்சிடண்ட்ல செத்துப் போயிட்டாருன்னு. வீட்டுல பல்ப் மாட்ட டேபிள் மேல ஏறுறேன். டேபிள் உடைஞ்சி கால் அடிப்பட்டுருது. நான் ஏன் சொல்றேன்னா இன்னைக்கு இருக்குற சோஷியல் மீடியா அன்னைக்கு இல்ல.

நான் எல்லாரையும் குத்தம் சொல்ல முடியாது. இதுக்குக் காரணம் சோசியல் மீடியா இல்ல. பப்ளிக் தான். இதனால உங்களுக்கு என்ன லாபம்? உங்க பக்கத்து வீட்டுல ஒண்ணு நடக்குது. அதைப் பத்தி நீங்க கவலைப்படுவீங்களா? இல்ல. சினிமாக்காரங்கன்னா மட்டும் என்ன நடக்குதுன்னு பப்ளிக் தான் பார்க்குறாங்க. அவங்களைப் பத்தி யாராவது ஏதாவது சொன்னா உடனே கமெண்ட் பண்ணாதீங்க.

நானும் அம்பிகாவும் 16 படத்துல கணவன், மனைவியா நடிச்சிருக்கேன். செட்ல புருஷனும், பொண்டாட்டியும் வந்துட்டாங்க. ஷாட்டுக்குப் போகலாம்னு சொல்வாங்க. பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? இது தான் நடக்குது. அந்தப் பொண்ணு பாவம். அமெரிக்காவுல பிரேம்குமார் மேனன்னு ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகிட்டாங்க. அதனால சோசியல் மீடியாவுல வர்றது எல்லாம் உண்மைன்னு நினைச்சி ஏமாறாதீங்க. இனிமே அந்தத் தப்பைப் பண்ணாதீங்க. இவ்வாறு அவர் தன்னோட ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Next Story