More

ரேஸ் பைக்கில் சென்ற பிரபல நடிகர்…படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் சாய் தரம் ராஜ். இவர் 2014ம் வருடம் வெளியான ‘பிள்ளா நூவு லேனி ஜீவிதம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார்.  அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரிபப்ளிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று ஹைதராபாத் மாதாப்பூர் பகுதியில் தனது அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்ற போது அவர் விபத்தில் சிக்கினார். இதில், படுகாயமடைந்து சுயநினைவை இழந்த அவரை அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாய் தரம் ராஜ் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் தங்கை மகன் ஆவார். எனவே, சிரஞ்சீவி, பவன்கல்யாண் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts