தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும் கே பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின
இந்த தேர்தலில் பல்வேறு குழப்பங்கள் நடந்ததாகவும் ரஜினிகாந்த் உள்பட பலருக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் சற்று முன் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது
இந்த தீர்ப்பின் படி ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்றும் மீண்டும் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதிய வாக்காளர் பட்டியலை தேர்வு செய்து மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் என்பவர் கண்காணிப்பார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் புதிய தேர்தல் நடத்தும் வரை தற்போது பணியில் உள்ள தனி அதிகாரியை நடிகர் சங்க பணிகளை கவனிப்பார் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது இந்த தீர்ப்பு விஷால் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…