பொது மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் நடிகர்

by adminram |

af81b821a76ea7dfc736c9c61a4a9afd

மெட்ரோ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிரிஷ் தற்போது ‘பிஸ்தா’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து வருகின்றார்.

ராஜா ரங்குஸ்கி’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர், பல உதவிகளை செய்து வருவது போல், நடிகர் சிரிஷும் அத்தியாவாசிய மளிகை பொருட்கள், உணவு போன்ற உதவிகளை செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஏழை மக்களின் உயிரை காக்கும் விதமாக, இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தி வருகிறார்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கொரோனாவால் பாதித்த ஏழை மக்களுக்கும், திரையுலகினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் நடந்த முதல் முகாமில் சுமார் 185 பேருக்கு சிரிஷின் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

fb6a71e980d2065f8d0dae5d779c01cf-2

இதில், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். 100 பேருக்கு மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதன் நிமித்தமாக சென்னையில் நடந்த முதல் முகாமில் சுமார் 185 பேருக்கு சிரிஷின் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதில், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். 100 பேருக்கு மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நடிகர் சிரிஷ் நடத்தி வரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு, மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Next Story