நடிகர் சிம்பு எனும் சிலம்பரசன் எப்போது யார் இயக்கத்தில் நடிப்பார் என யாருக்கும் தெரியாது. திடீரென மணிரத்னம், கௌதம் மேனன் படத்தில் நடித்து ஹிட் கொடுப்பார். திடீரென சுசீந்திரன் போன்ற இயக்குனர்களின் படத்தில் நடித்து பிளாப் கொடுப்பார். திடீரென அறிமுக இயக்குனர் படத்தில் நடிப்பார். அதனால்தான் திரைத்துறையில் அவரது வளர்ச்சி ஏறுமுகமாகவும், இறங்கு முகமாகவும் மாறி மாறி இருக்கிறது.
இந்நிலையில், ரவுத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா ஆகிய படங்களை இயக்கி கோகுல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இத்தனைக்கும், இதில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் மட்டுமே வெற்றிப்படம்.
கடந்த வருடம் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க ‘கொரோனா குமாரு’ என்கிற படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவே இல்லை. விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களி பிஸியாக இருப்பதால் தற்போது சிம்புவிடம் அதே கதையை கூறி ஓகே செய்துள்ளாராம் கோகுல்.
சிம்புவை வைத்து படம் எடுக்க சுதா கொங்கரா போன்ற வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்கள் பலரும் காத்திருக்கின்றனர். ஆனால், சிம்புவோ தோல்விபடங்களை கொடுத்த இயக்குனரை நம்புவது ஏன் என தெரியவில்லை என திரையுலகில் ஆச்சர்யப்படுகின்றனர்.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…