டைரக்டர் கவுதம் மேனனா இல்ல பாலாவா? - வேற லெவலில் சிம்பு.. புதிய பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்...
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர்.
இப்படத்தில் சம்பள விவகாரத்தில் பஞ்சாயத்து ஆகி ஒரு பாடல் ஆட்சி எடுக்கப்படாமல் இருந்தது. அதன்பின் ஒருவழியாக சிம்பு அதில் நடித்துக்கொடுத்தார். தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘நதிகளிலே விளையாடும் சூரியன்’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் கதையும் மாறி தலைப்பும் மாற்றப்பட்டது. இது சிம்புவின் 47வது திரைப்படமாகும். எனவே, டிவிட்டரில் #SilambarasanTR47 மற்றும் #STR47 ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிம்பு இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நிற்கிறார். சிம்பு படத்தின் இந்த போஸ்டர் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சிம்புவின் லுக்கை பார்த்த நெட்டிசன்கள் இப்படத்தின் இயக்குனர் பாலாவா? இல்லை கவுதம் மேனனா? என பதிவிட்டு வருகின்றனர்.