வெற்று உடம்புடன் ஒரு செல்பி... அதிர்ச்சியை கொடுத்த ‘வெந்து தணிந்தது காடு’ சிம்பு...
100 கிலோ எடைக்கு மேல் இருந்த நடிகர் சிம்பு தனது உடலை கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்து எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார். மேலும், 30 நாளில் ஈஸ்வரன் படத்தை முடித்து மாநாடு படத்திற்கு சென்று சுறுசுறுப்பு காட்டினார். அதன்பின் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.
தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் வேறு மாதிரியான லுக்கில் நடிக்க துவங்கியுள்ளார். தாடி, மீசையை வழித்து சின்னப் பையன் போல் மாறியுள்ளார் சிம்பு. கையில் குச்சியை வைத்துக்கொண்டு அவர் நிற்கும் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இப்படத்தில் அவர் வெட்டியான் வேடத்தில் நடிக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், படப்பிடிப்புகளுக்கு நடுவே தனது கேரவேனில் வெற்று உடம்புடன் செல்பி எடுத்துக்கொள்ளும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் இதை தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ‘எங்க தலைவர பாருங்க’ என உருகி வருகின்றனர்.
இப்படத்திற்கு சிம்பு மேலும் கொஞ்சம் உடல் இளைத்திருக்கிறார் என கூறப்படுகிறது.