இது செம தெறி மாஸ் எடிட்….சிம்புவின் 2 வருட பயணத்தை 2 நிமிடத்தில் கூறிய வீடியோ…

Published on: July 12, 2021
---Advertisement---

39da4baad5ce1fcbc647acf4902deb77

நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களாக உடலில் எடை கூடி மிகவும் குண்டாக இருந்தார். அதே உடலுடன் செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மாநாடு படத்தில் ஒரு பாடல் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளில் கூட குண்டான உடலுடன் நடித்தார். சிம்புவின் உடலை நடிகர் பிரபுவுடன் ஒப்பிட்டு யுடியூப் விமர்சகர்கள் கிண்டலடிக்கும் அளவுவுக்கு சென்றது. 

b6d6ae85c73ddeaa2544320778032cbc

எனவே, வெறியான சிம்பு உடலை குறைத்துவிட்டு வருகிறேன் எனக் கூறி வெளிநாட்டுக்கெல்லாம் சென்று உடற்பயிற்சி செய்தார். அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், அந்த நேரத்தை பயன்படுத்தி கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். அதே தோற்றத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் வேகமாக நடித்து கொடுத்துவிட்டு ‘மாநாடு’ படத்தையும் தற்போது முடித்துவிட்டார்.

b38854e503541ed60e18845d13424f16

இந்நிலையில், சிம்புவின் இந்த 2 வருடன் பயணத்தை சில புகைப்படங்களை இணைந்து சிம்பு ரசிகர் ஒருவர் செமையாக எடிட் செய்து ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘இந்த 2 வருட பயணத்தை படம்பிடிக்க முடியவில்லை. உங்களின் அன்பும் ஆதரவும் இல்லமால் இதை நான் செய்திருக்க முடியாது.  இந்த அருமையான வீடியோவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment