பிரபல நடிகருக்காக எருமை மாட்டை பலி கொடுத்த ரசிகர்கள் - அதிர்ச்சி செய்தி

by adminram |

185cbca6802400e2b471133cfb107bce

கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சுதீப். கன்னடம் மட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ‘ஈ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவன பிடி’ என்கிற படத்திலும் நடித்தார்.

9df0d209b580e5cb8bff5397559f8052-1
sudeep

இந்நிலையில், இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் கர்நாடகாவில் பல இடங்களிலும் இவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதில், இவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு எருமை மாட்டை பலி கொடுத்தனர். மேலும், மாட்டின் ரத்தத்தை சுதீப்பின் கட் அவுட் மீது தெளித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

201440065f2aebf84bcdcc6d82245ed4
sudeep
Next Story