ஜி.பி.முத்து கொலை மிரட்டல் : பிரபல நடிகர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

by adminram |

7c30789db4c41caf1bcc7c4579a7999f

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் காதல் திரைப்படம் மூலம் பிரபலமானவர் சுகுமார். இவர் சென்னை காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருகின்றனர். ஆனால், ஜிபிமுத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட சிலர் யுடியூப், இன்ஸ்டாகிரம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

949a3128d8d56bcd002b5625772c02b6

இதனை தடுத்த நிறுத்த என் நண்பர் மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுச்செயலாளர் ஏழுமலை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். நானும் ஊடகங்கள் வாயிலாக இதை தெரிவித்தார். இதையடுத்து, நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் சமுக வலைத்தளங்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.

Next Story