More

சரவணா! சினிமாவ மூட்டை கட்டிட்டு பொழப்ப பாரு! – சூர்யா கடந்து வந்த பாதை….

எல்லா பெற்றோருக்கும் குழந்தை வெற்றிகரமாக வாழ்வதை கண்டால் சந்தோஷம்….

Advertising
Advertising

ஆனால் ஒரு பந்தயத்தில் பத்து பேர் ஓடினால் முதல் ஆளுக்கு கிடைக்கும் மரியாதை கடைசி நபருக்கு கிடைப்பதில்லை. அப்போ ஒரு அப்பா பத்தாவதா வந்த மகனை என்ன சொல்லணும்? ‘நல்ல முயற்சிடா? உனக்கு இனியும் வாய்ப்பு இருக்கே’ என சொன்னால் எப்படி உற்சாகம் கிடைக்கும்…

நடிகர் சூர்யா ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமானார். படம் பெரிய கிரேட் சக்சஸ்லாம் கிடையாது. சிவசக்தி பாண்டியனின் ‘காதலே நிம்மதி’ பெட்டி திரும்பி வந்து விட்டது. சந்திப்போமோ, உயிரிலே கலந்தது எல்லாம் பெரிய வெற்றி பெறவில்லை. சிவக்குமார் மகனை ஒதுக்கி விட்டார்களே என அப்பாவுக்கு ஆதங்கம். அறிமுகமாகி மூன்று வருடமாகி விட்டது. எந்த தயாரிப்பாளரும் வரக்காணோம். அப்போது விஜய்காந்த் சூர்யாவுக்காக நடித்துக்கொடுத்த ‘பெரியண்ணா’ 1999 ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பில் ரிலீசானது. 

அப்போது சிவக்குமார் கராறாக  சூர்யாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?  ‘சரவணா…சினிமாவெல்லாம் மூட்டை கட்டிட்டு சிஏ பண்ணி வாழ்க்கையிலே முன்னேறப்பாரு. உன்னால எனக்கும் கெட்ட பெயர்…’  சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன்.

சிவக்குமாரின் சுடுசொற்களை கேட்டு தலைகுனியும் போது நொந்தது சூர்யாவின் தாய் தான். எல்லோருக்கும் கிடைக்காத அம்மா சூர்யாவுக்கு கிடைத்தார். 

பெரியண்ணா 1999 தமிழ் புத்தாண்டில் தமிழ்நாட்டில் ரிலீசான போது கேரளாவில் 1999 விஷு தினத்தில் ‘ஃப்ரண்ட்ஸ்’ என்கிற படம் ரிலீசானது. ஃப்ரண்ட்ஸின் மெகா வெற்றியை கண்ட அப்பட இயக்குனர்கள் சித்திக்-லாலின் நண்பர் ஸ்வர்கசித்ரா அப்பச்சன் தமிழில் தயாரிக்க விஜயிடம் தேதி வாங்கி(அது ஒரு தனிக்கதை) ஜெயராம் ரோலில் விஜய் நடிக்க முகேஷ் ரோலில் யாரை போடுவது என தேடும் போது எடிட்டர் டி.ஆர்.சேகர் ஒரு ஐடியா சொல்கிறார். விஜய்யும், சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஃப்ரண்ட்ஸ் என்கிற டைட்டிலுக்கு ஏற்ற நடிகர் சூர்யா எனச்சொல்ல சித்திக், அப்பச்சன், சேகர் மூவரும் சிவக்குமார் வீட்டுக்கு போகிறார்கள்.சேகரை முன்பே தெரியுமாதலால் சிவகுமார் காபியெல்லாம் கொடுத்து உபசரிக்கிறார். சேகர் சூர்யாவின் படம் பற்றி சொல்ல சிவக்குமாருக்கு டென்ஷன் எகிறிவிட்டது. 

“அவன் நடிக்கவே வேண்டாம். கிரிக்கெட் விளையாட போயிருக்கான். இத்தனை நாள் நான் கட்டி வைத்திருந்த பெயரெல்லாம் போயிடும் போல….அவனை சி.ஏ படிக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்’ என விரட்டாத குறையாக சொல்ல இவர்கள் எழுந்து வந்து விட்டனர். 

பின் பக்கமாக வீட்டின் முன்னால் வந்த சூர்யாவின் அம்மா சேகரிடம் ‘தம்பிக்கு சினிமான்னா உயிர். நடிக்க தான் அவனுக்கு ஆசை…எப்படியாவது சான்ஸ் கொடுங்க’ எனச்சொல்ல…இவர்கள் முகவரி  கொடுத்து வரச்சொல்கின்றனர்.

அடுத்த நாள் மாலை சூர்யா டாணென்று ஆஜர். சித்திக், வசனகர்த்தா கோகுலகிருஷ்ணா, அப்பச்சன் உட்கார சொல்லியும் சூர்யா உட்காரவேயில்லை..’சார்…சான்ஸ் எப்படியாவது கொடுங்க’ என்பதாக அவர் பவ்யம் இருந்தது. அப்பச்சனுக்கும், சித்திக்குக்கும் பிடித்துப்போக ‘ப்ரண்ட்ஸ்’ தமிழில் பிறந்தது. அதன்பின் பாலா இயக்கத்தில் ‘நந்தா’ நந்தா படம் மூலம் ‘காக்க காக்க’ வாய்ப்பு… அதன்பின் மீண்டும் பாலா இயக்கத்தில் ‘பிதாமகன்’.. அதன்பின் சூர்யா திரும்பிப்பார்க்கவேயில்லை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விஜய்க்கு கோடிகளில் சம்பளம். சூர்யாவுக்கு ‘ப்ரண்ட்ஸ்’படத்தில் வெறும் ஐந்து லட்சம் தான். அதை தரவில்லையென்றாலும் கூட புகார் சொல்லியிருக்கமாட்டார்.

ராமாயணம் படித்த அப்பா சிவக்குமார் தான் மகனின் வெற்றியை பார்த்ததும் பூரித்து போகிறார். மேடைக்கு மேடை புகழ்கிறார். எல்லா மகன்களும் வெற்றி பெறமுடியாது. முயற்சிக்காத மகன்களை புறக்கணிப்பதில் அர்த்தம் இருக்கிறது. கடைசியாக வந்தவனை யார் போற்றுவது?..அவனுடைய குடும்பத்தாரை விட வேறு யார் இருக்க முடியும்….. எல்லோருக்கும் சூர்யா அம்மா போல் மனம் வருவதே மனித மனங்களில் நல்ல மாற்றம்….

– முகநூலில் இருந்து செல்வன் அன்பு

Published by
adminram

Recent Posts