More

18 வயது பையனாக நடித்தது எப்படி? – ‘சூரரைப்போற்று’ ரகசியம் சொல்லும் சூர்யா

இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பின் சூர்யாவை வைத்து ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சூர்யா தனது சொந்த பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்தார். 

Advertising
Advertising

ஆனால், படம் தயாராகி வெளியாகும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தள்ளிப்போனது.தற்போது ஒருவழியாக இப்படம் வருகிற 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் சில காட்சிகளில் சூர்யா 18 வயது பையனாக நடித்துள்ளார். இதுபற்றி பேட்டி கொடுத்துள்ள சூர்யா ‘ தாடி மீசையுடன் இருந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு முடிந்த அடுத்த நாளே 18 வயசு பையன் போல் தோற்றம் கொண்ட காட்சிகளை எடுத்தனர். 

அதற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் செய்தேன். என் முகத்தை கிராபிக்ஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால், என் தோற்றத்தை பார்த்து 18 வயது போல்தான் இருக்கிறது எனக்கூறி கிராபிக்ஸ் செய்யப்படவில்லை’ என சூர்யா கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts