என்னது சினிமாவை தாண்டி இத்தன பிசினஸ் பண்றாரா சூர்யா..? கோடிகளில் கல்லா கட்டுறாரு போலயே...!
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. இன்று சூர்யா தன்னுடைய 49வது பிறந்தநாளையும் கொண்டாடி வருகின்றார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்திலிருந்து சூர்யாவின் வீடியோ வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் சூர்யா மிக ஸ்டைலாக வாயில் சிகரெட் அவர் நடந்து வருவதை பார்த்து ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 25 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகின்றது.
மேலும் இவரது சொத்து மதிப்பு மட்டும் 300 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது. சூர்யா அகரம் என்ற பவுண்டேஷன் மூலமாக ஏகப்பட்ட குழந்தைகளுக்கு படிப்பு உதவி செய்து வருகிறார். சினிமாவில் குறைவான அளவு சம்பளம் வாங்கினாலும், சைடாக 6 பிசினஸ்களை கவனித்து வருகிறாராம். அந்த வகையில் இவர் 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்து வருகின்றார்.
அடுத்ததாக துணி ஏற்றுமதி பிசினஸ் செய்து வருகிறாராம். பிரம்மாண்டமான ரெடிமேட் கார்பன்ஸ் நடத்தி வரும் சூர்யா இதன் மூலம் ஆடைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இதையடுத்து இந்தியாவில் பல மாநிலங்களில் ஏர்போர்ட்களில் பார்க்கிங்-கை ஏலம் எடுக்கும் உரிமையையும் சூர்யா வைத்திருக்கின்றார்.
இதன் மூலம் பல ஏர்போர்ட் பார்க்கிங்-கை ஏலம் எடுத்து அதிலும் சம்பாதித்து வருகின்றாராம். அதுமட்டுமில்லாமல் காற்றாலை பிசினஸையும் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனை மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தனது பேட்டியில் கூறியிருக்கின்றார்.