தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு ஏராளமான படங்களில் நடித்து தன்னை தானே தரம் தாழ்த்தி மக்களை மகிழ்விப்பதில் சிறந்தவர். இன்னும் இவரின் காலி இடத்தை நிரப்ப ஒருவரும் வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஆனால், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்தால் அப்படத்திலிருந்து வடிவேலு விலக, இதனால் பல கோடிகள் நஷ்டம் என அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க, வடிவேலு படங்களில் நடிக்க ரெட் கார்ட் போட்டனர். இதனால் கடந்த பல வருடங்களாகவே படங்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் இவரது மீம்ஸ் தான் முழு நேர பொழுதுபோக்காக இருந்து வருகிறது.
இந்நிலையில், வடிவேல் வெப் சீரியஸில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இதுபற்றி கேட்டால் விரைவில் நல்ல செய்தி வரும் என்று மட்டும் வடிவேலு கூறிவந்தார். தற்போது சில உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உருவாக்கியுள்ள ஆஹா (Aha) ஆப்பில் இந்த வெப் சீரியஸ் வெளியாகவுள்ளது.
இந்த ஆப்பில் பல தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழில் இந்த ஆப்பை பிரபலப்படுத்த முடிவெடுத்து அந்நிறுவனம் களம் இறங்கியுள்ளது. எனவே, வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. விரைவில் இயக்குனர் உள்ளிட்ட மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், ஒருபக்கம் சினிமாவில் நடிக்கும் முயற்சிகளையும் வடிவேலு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவை மீண்டும் காண ரசிகர்கள் ஆயுத்தமாகி வருகின்றனர்.
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…