எனக்கு எண்டே கிடையாது – ரீ என்ட்ரி குறித்து நடிகர் வடிவேலு பேட்டி!

வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பலகோடி ரசிகர்ளை பெற்றார். இதற்க்கிடையில் 23ம் புலிகேசி திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்னையால் அவருக்கு எண்டு கார்ட் போடப்பட்டது. 

Also Read

பல வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்க தயாரிக்கயிருக்கிறார்.  சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அந்த திரைப்படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்று பேசிய அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், 10 ஆண்டுகளாக உங்களை நடிக்கவிடாமல் கேட் போட்ட நிறைய பேருக்கு நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்? என கேட்டார். அதற்கு பதிலளித்த வடிவேலு,  நான் சொன்ன காமெடிதான். எனக்கு எண்டே கிடையாது. என தனக்கே உரித்தான பாணியில் காமெடியாக பேசி அங்கிருந்தவர்களை கலகலப்பாக்கினார். இந்த இடைப்பட்ட காலத்தில் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியா வெடித்தது அது எல்லாவற்றிலும் இருந்து நான் தப்பித்துவிட்டேன் என கூறினார். 
 

Published by
adminram