10 வருஷம் கழிச்சி இப்பதான்!.. அதுக்குள்ள ஆட்டமா?.. அடக்கி வாசிங்க வடிவேலு!....

by adminram |

073fb5dbc81080e29638f97093854e25-1

திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வடிவேலு. கவுண்டமணிக்கு பின் காமெடியில் உச்சம் தொட்டவர் அவர். தற்போது அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இன்னும் அவரின் புகைப்படங்கள்தான் மீம்ஸ்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து தமிழ் சினிமா உலகின் அதிருப்தியை பெற்றவர் வடிவேலு. இதைத்தொடந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்க பலரும் தயங்கினார். அப்போது துவங்கியது நடிகர் வடிவேலுவின் சரிவு. அதன்பின் ஷங்கரின் தயாரிப்பில் உருவான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அவருக்கும், இயக்குனருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் அப்படத்திலிருந்து வடிவேலு வெளியேறினார். அப்படத்திற்காக போடப்பட்ட அரங்குகள் பல நாள் அப்படியே கிடக்க தயாரிப்பாளர் ஷங்கருக்கு ரூ.2 கோடி நஷ்டம். மேலும், வடிவேலுக்கு முன் பணமாக அவர் கொடுத்தது சில கோடிகள்.

fa359207540a4974fbcd5e39b3117b94

எனவே, தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் புகார் அளிக்க வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. எனவே, கடந்த 10 வருடங்களாகவே வடிவேலு திரைப்படங்களில் நடிக்கவில்லை. பலரின் முயற்சிக்கு பின்னர் தற்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சனையை கையில் எடுத்த லைக்கா நிறுவனம், வடிவேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர் மீதான புகாரை ஷங்கர் வாபஸ் பெற்றார். எனவே, வடிவேலுவுக்கான தடை நீங்கிய மீண்டும் அவர் களம் இறங்கவுள்ளார்.

cb55d01f8616ad6167dcc6b70fe4dc44
Vadivelu

அடுத்து லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் சுராஜ் கடந்த 2 வருடங்களாக பேசி வருகிறார். ஆனால், இப்படத்தின் தலைப்பை அவர் முறையாக பதிவு செய்யவில்லை. இதில், பிரச்சனை என்னவெனில், பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷை வைத்து ‘நாய் சேகர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. மேலும், இந்த தலைப்பை முறையாக அவர்கள் பதிவும் செய்துள்ளனர்.

d9c38a2b95a57963f8e9a043efd82427-1

இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு போன் போட்ட வடிவேலு நாய் சேகர் தலைப்பை எனக்கு கொடுத்து விடுங்கள். நீங்கள் தலைப்பை மாற்றிக்கொள்ளுங்கள் என கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மறுக்க, உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம். இல்லையேல் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி என் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்கிற தலைப்பை அறிவித்து விடுவேன் என மிரட்டினாராம். இந்த தகவலை பிரபல வலைப்பேச்சு யுடியுப் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நாய் சேகர் என்றாலே நமக்கு நினைவில் வருவது வடிவேல்தான். அவர் இல்லாமல் அந்த தலைப்பு இல்லை. அந்த தலைப்பில் நடிக்க பொருத்தமானவரும் அவர்தான். ஆனால், கேட்கும் முறை ஒன்று இருக்கிறது அல்லவா?’ என்கிற சினிமா உலகம்.

10 வருஷம் கழிச்சி இப்பதான் நடிக்க வறீங்க... கொஞ்சம் அடக்கி வாசிங்க வடிவேலு...

Next Story