ரெண்டு படமும் ஒரே இடத்துல ஷீட்டிங்!. விஜய் – அஜித் சந்தித்து பேசுவார்களா?….

Published on: August 2, 2021
---Advertisement---

fc6f8bd5dfba8d07f386b1538f63e02f-1

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதன்பின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில், விஜய் – பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது.  அடுத்த கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. அங்கு பரபர ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

fa2cb42e4936c38893d0e7d4844066b1

அதேபோல், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிய நிலையில் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. அந்த காட்சிகளை ரஷ்யாவில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, பீஸ்ட் மற்றும் வலிமை என இரண்டு படக்குழுவினரும் விரைவில் ரஷ்யா செல்லவுள்ளனர்.

f5287a532174338e9de5853d4690e75b

ஒரே நாட்டில் விஜய் – அஜிதி படங்களின் படப்பிடிப்பு நடைபெறுவதால் அங்கு விஜயும், அஜீத்தும் சந்தித்து பேசுவார்களா என்கிற என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment