விஜய் வீட்டை இடிக்கப் போறாங்களா? கிண்டிவிடும் பிரபலத்துக்குப் பதிலடி கொடுத்த அந்தனன்
விஜய் வீடு இடிக்கப்படும் என பிரபலம் ஒருவர் சொன்னது வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அரசியல் கட்சி துவங்கி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் விஜய். தன்னோட கொள்கையாக என்ன அறிவிக்கப் போகிறார்? அவர் திராவிட இயக்கமா? தமிழ் தேசியமா? அவர் மத்திய அரசை எதிர்ப்பாரா? என பல்வேறு கேள்விகள் விஜயை நோக்கி வந்துள்ளது. இந்த நிலையில் விஜய் நீட் தொடர்பாக பேசிய விஷயம் பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். பொதுப்பட்டியலில் இருந்து விடுதலை கொடுக்கணும்னு சொல்லி இருக்கிறார். இது ஒரு முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க... லீக்கான அந்த வீடியோ!.. திரிஷாவை அழ வைத்த விஜய்!.. இவ்வளவு நடந்திருக்கா?!...
அதைவிட முக்கியமாக பார்க்கப்படும் விஷயம் இது தான். தமிழக அரசு சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்று சொன்னதுதான். விஜயின் அரசியல் எதிரி திமுக என்பது தெரிந்த விஷயம் தான். என்றாலும் அவர் திமுக அறிவித்த விஷயத்திற்கு ஆதரவு கொடுத்தது ஆச்சரியமாக உள்ளது. மாணவர்களுக்கு இது பரந்த உலகம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெற்றி நடை போடு என அறிவுரை கூறிய விஜய் கருத்து வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால் அவரது பின்னால் நிற்கும் கூட்டத்தை குழப்பும் விதமான வேலைகள் நடந்து வருகின்றன.
இதுபற்றி யூடியூபர் மாரிதாஸ் என்ன சொல்றாருன்னா, விஜயின் வீடு நீலாங்கரையில் இருக்கு. இது கடல் தொலைவில் இருந்து சில மீட்டர் தூரத்துல இருக்கு. சட்டப்படி இந்த வீட்டை இடிக்கறதுக்கான நடவடிக்கைகள் வருங்காலத்தில் நடக்கும். திமுக வந்து உன் வீட்டை இடிச்சிருவோம்னு விஜய்கிட்ட சொன்னதுக்காகத் தான் அவர் தமிழக சட்டசபையில் நடந்த நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்துப் பேசுறாருன்னு ஒரு கருத்தை சொல்றாரு.
இதையும் படிங்க... இப்படியே போனா நாமம்தான்!.. ஆர்வம் காட்டாத கமல்!. அப்செட்டில் ஷங்கர்!. இந்தியன் 2 ஹிட் அடிக்குமா?!
இதுல இருந்து அவர் சொல்றது என்னன்னா விஜயின் வீடு கேப்டன் கல்யாண மண்டபம் மாதிரி இடிக்கப்படும்னு சொல்றாரு. ஆனா இவர் விஜய் வீட்டைப் பார்த்தாரா என்ன என தெரியவில்லை. ஏன்னா விஜய் வீட்டுக்கு முன்னாடியே நிறைய பங்களாக்கள் இருக்கு. பாரதி ராஜா வீடு, முதலமைச்சரின் மருமகன் சபரீசன் வீடே அதே தொலைவில் தான் இருக்கு. அப்படி விஜய் வீட்டை இடித்தா இதை ஏன் இடிக்கலைன்னு கேட்பாங்களா? மாட்டாங்களா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.